/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
/
நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 30, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறில் எம்.ஜி., காலனியில் சேதமடைந்த சிமென்ட் நடைபாதைக்கு பதில் இரும்பு கம்பிகளால் நடைபாதை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மூணாறில் சமீபத்தில் பெய்த பலத்த மழையில் எம்.ஜி., காலனியில் பொது வழங்கல்துறை குடோன் அருகேசிமென்ட் நடைபாதை முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த நடைபாதையை 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். நடை பாதை முற்றிலும் சேதமடைந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஊராட்சி சார்பில் ரூ.37 ஆயிரம் செலவில் இரும்பு கம்பிகளால் நடைபாதை அமைக்கப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

