/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக் நினைவு நாள்
/
லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக் நினைவு நாள்
லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக் நினைவு நாள்
லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக் நினைவு நாள்
ADDED : மார் 10, 2025 02:37 AM
கூடலுார்: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கின் 114 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே 1895ல் கட்டி முடித்தார். அணையில் உள்ள நீரை மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
வறட்சியின் பிடியிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற அணையைக் கட்டிக் காப்பாற்றிய இவரை தமிழக மக்கள் கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இவர் 1911 மார்ச் 9ல் இறந்தார்.
இவரது கல்லறை இங்கிலாந்தில் கேம்பர்லி நகரில் உள்ள பழமையான செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் உள்ளது. இவரின் 114வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் இவரின் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க செயலாளர் ரஞ்சித், மாவட்ட தலைவர் ஜெகன், மாவட்ட செயலாளர் ரகுராமன், ஒன்றிய இணைச்செயலாளர் தனசேகர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி பரீத்கான் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.