ADDED : ஏப் 21, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி முத்துநகர் கோபால் 67, மின்வாரிய ஓய்வு பணியாளர்.இவர் டூவீலரில் வீரபாண்டி சென்று திரும்பினார்.
அவருக்கு பின்னால் தாமரைகுளம் ராஜேந்திரன் ஓட்டி வந்த லாரி வந்தது. போடி விலக்கு ரவுண்டானாவில் டூவீலருக்கு பின் சென்ற லாரி இடது புறம் திரும்பியபோது டூவீலர் மீது மோதியது.
கீழே விழுந்த கோபால் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோபால் மனைவி ரதி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் உடலை கைப்பற்றி தேனிமருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

