ADDED : ஆக 07, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் மாநில அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்,'ஓய்வூதியர் காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைந்திடவும், ஓய்வூதியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாத மருத்துவசிகிச்சை வழங்கிட வேண்டும். மருத்துவ சிகிச்சை செலவு தொகை முழுவதையும் காலதாமதமின்றி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஆண்டவர் முன்னிலை வகித்தார். மாநில துணைதலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் சிவமணி உள்ளிட்டோர் பேசினர்.