/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் காய்ச்சலில் அவதி
/
சாக்கடை கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் காய்ச்சலில் அவதி
சாக்கடை கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் காய்ச்சலில் அவதி
சாக்கடை கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் காய்ச்சலில் அவதி
ADDED : ஜூலை 12, 2024 04:56 AM

தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் ஊராட்சி 2 வது வார்டில் திறந்தவெளியில் சாக்கடை செல்வதால் பொதுமக்கள் சுகாதாரசீர்கேட்டில் தவிக்கின்றனர்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம்,ஜெயமங்கலம் ஊராட்சி 2 வது வார்டு முனியாண்டி கோயில் தெருவில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டப்படாததால் கழிவுநீர் திறந்தவெளியில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் சுகாதார கேட்டில் தவிக்கின்றனர்.
ஜெயமங்கலம் கிராம சபை கூட்டங்களில் இந்தப் பகுதி மக்கள் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் 15 வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.3.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு தோண்டப்பட்ட நிலையில் என்ன காரணத்தினாலோ பணி கிடப்பில் போடப்பட்டது.
மணிமேகலை கூறுகையில்: திறந்த வெளியில் சாக்கடை கால்வாய் செல்வதால் இந்த பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பெரியகுளம் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.