/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீர்த்த தொட்டியில் குளித்துமகிழும் பொதுமக்கள்
/
தீர்த்த தொட்டியில் குளித்துமகிழும் பொதுமக்கள்
ADDED : மே 04, 2024 05:56 AM

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பகலில் கடும் வெப்பக் காற்று வீசுகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறையால் மாணவர்கள் நீர் நிலைகளில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். சமச்சீரற்ற மேடு, பள்ளங்கள் நிறைந்த பகுதிகளில் குளிக்க கூடாது எனவும், குளிக்க தகுதியான நீர் நிலைகளில் பெற்றோர் துணையுடன் குளிக்க தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் தீர்த்ததொட்டி அமைந்துள்ளது. இந்த தீர்த்த தொட்டி அருகே வராகநதி செல்வதால் குளிர்ந்த ஊற்று நீரால் தீர்த்ததொட்டி நீர் நிரம்புகிறது.
தீர்த்த தொட்டியில் 6 அடி முதல் 7 அடி தண்ணீரில் ஏராளமானோர் தினமும் காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.