/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதாள சாக்கடை பணி முடிந்து ரோடு சீரமைக்காததால் அவதி பி.தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் தவிப்பு
/
பாதாள சாக்கடை பணி முடிந்து ரோடு சீரமைக்காததால் அவதி பி.தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் தவிப்பு
பாதாள சாக்கடை பணி முடிந்து ரோடு சீரமைக்காததால் அவதி பி.தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் தவிப்பு
பாதாள சாக்கடை பணி முடிந்து ரோடு சீரமைக்காததால் அவதி பி.தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் தவிப்பு
ADDED : மார் 11, 2025 05:46 AM

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பி.தர்மத்துப்பட்டியில் பாதாள சாக்கடை பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரோடு, சாக்கடை, தரைப்பாலம், தடுப்புச் சுவர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பி.தர்மத்துப்பட்டி 10, 11வது வார்டில் பொன்னம்மாள் கோயில் தெரு, வி.எம்.தெரு, கக்கன் தெரு, கம்பர் தெரு, பாரதியார் தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தெரு, செல்லாயி அம்மன் கோயில் தெரு, வல்லபாய் படேல் தெருக்கள் அடங்கி உள்ளன. 700 குடும்பங்கள் உள்ளன.
கக்கன் தெருவில் சாக்கடை சிறு பாலத்தில் தடுப்புச் சுவரின்றி இன்றி பக்கவாட்டு பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து உள்ளது.
சாக்கடை தூர்வாராததால் பிளாஸ்டிக், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அருகே குடியிருக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். பாதாள சாக்கடை பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் சாக்கடை, ரோடு வசதி இன்றி மக்கள் சிரமம் அடைகின்றனர். அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை
கிராம மக்கள் கூறியதாவது:
மேடு பள்ளங்களான தெருக்கள்
வாசகர், பி.தர்மத்துப்பட்டி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னம்மாள் கோயில் தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
பாதாள சாக்கடை பணிக்காக தெருவில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை.
மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி, சிலாப்புகள் சேதம் அடைந்துள்ளன. ரோடு குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் டூவீலரில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர்.
மழை காலங்களில் தெருவில் மழைநீர் தேங்கி நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி கிடக்கிறது. சுகாதார சீர்கேட்டில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்தவர்களை கொண்டு செல்ல சிரமம்
பொன்ராம், பி.தர்மத்துப்பட்டி: இளங்கோ தெரு, காளியம்மன் கோயில் தெருவில் ரோட்டில் கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளன.
பாதாள சாக்கடை பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரோடு வசதி செய்து தரப்படவில்லை. இந்த ரோட்டில் டூவீலர், ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.
கக்கன் தெருவில் சாக்கடை தரைப் பாலம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. ரோடு சேதம் அடைந்து உள்ளதால் இறந்தவர்களின் சடலங்களை கூட கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது.
செல்லாயி அம்மன் கோயில் தெரு மையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் அமைந்துள்ளது.
வாரம் ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்வதால் குடிநீருக்கு பதிலாக போர்வெல் நீரையே குடிநீராக பருகும் நிலையில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நுழைவு வாயில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க நடவடிக்கை இல்லை.
விளையாட மைதான வசதி இன்றி மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.