/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதில் சிரமம்
/
மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதில் சிரமம்
ADDED : மே 02, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் எஸ்.பி., அலுவலகத்திற்கு பின் புறம் அமைந்துள்ளது.
பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் விண்ணப்பிக்க, பிற சேவைகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். பின்னர் பலரிடம் வழிகேட்டு மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு செல்லும் நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதற்கு வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும் என, சிரமத்தை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

