sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்

/

வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்

வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்

வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்


UPDATED : ஜூலை 07, 2024 05:02 AM

ADDED : ஜூலை 07, 2024 02:42 AM

Google News

UPDATED : ஜூலை 07, 2024 05:02 AM ADDED : ஜூலை 07, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: வாசிப்பு பழக்கத்துடன் நுால்களை நேசிக்கும் வாசகர்களை உருவாக்கியுள்ளது நுாற்றாண்டு விழா காணும்பெரியகுளம் முழுநேர நுாலகம். இந்த நுாலகத்தில் படித்து அரசு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பலரும் அரசு துறைகளில் பணியில் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

மாவட்டத்தில் பெரியகுளம் பழமையான நகரமாகும். இங்குள்ள வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம், நகராட்சி, அரசு மருத்துவமனை, டவுன் யூனியன் கிளப், கிளைச்சிறை, எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளி, ஜெமீன்தார் துவக்கப்பள்ளி, யூ.சி., நடுநிலைப் பள்ளி ஆகியவை நூற்றாண்டை கடந்து இன்றும் புத்துணர்வுடன் இயங்கி வருகிறது.

இந்த வரிசையில் தேனி மாவட்டத்தில் முதல் நூலகமான பெரியகுளம் நுாலகம் நுாற்றாண்டை கடந்து முத்திரை பதித்து வருகிறது.

வடகரை, தென்கரையை இணைக்கும் சுதந்திரவீதி- ஆடுபாலம் அருகே நுாலகம் செயல்படுகிறது. 1923 ஆக., 17ல் ஒரே ஒரு மர பீரோவுடன் தென்கரை நூலகம் துவங்கப்பட்டது.

இந்த மரப்பீரோவை அப்போதைய மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த லண்டனை சேர்ந்த தாம்சன் வழங்கி நுாலகத்தை துவக்கி வைத்தார்.

இந்த பீரோவில் 5 அடுக்குகளில் 100 புத்தகத்தோடு துவங்கியது. 100 வயதை கடந்த மரபீரோ தற்போதும் கம்பீரமாகவும் நேர்த்தியாக காட்சியளிக்கிறது. தற்போது இந்த நுாலகத்தில் 54 ஆயிரம் நூல்கள் நிரம்பியுள்ளன.

முதன் முதலில் நுாலகம் வடக்கு அக்ரஹாரத்தில் வாடகை கட்டடத்தில் துவங்கியது. பின் கவுமாரியம்மன் கோயில் அருகே செயல்பட்டது. வார விடுமுறை வெள்ளிக்கிழமை தவிர காலை 8:00 முதல் இரவு 8:00 வரை செயல்படுகிறது.

தினமும் 160 வாசகர்களும், மாதம் 4,000 பேர் படிக்க வருகின்றனர். சந்தாதாரர்கள் மாதம் 800 நூல்கள் முதல் ஆயிரம் நூல்கள் வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கின்றனர்.

நுாலகத்தில் படித்து பயன்பெற்ற வாசகர்கள் கருத்து:

வங்கி வேலை பெற்று தந்த நூலகம்


ராஜகோபால், பெரியகுளம்: 1972ல் 6ம் வகுப்பு படிக்கும் போது நூலகம் செல்ல துவங்கினேன். போட்டித்தேர்வு நூல்கள், தினமலர் நாளிதழ் வாசிக்க துவங்கினேன். கல்லூரியில் படிக்கும் போது முக்கியமான செய்திகளை குறிப்பு எடுப்பேன்.

இதன் பலனாக வங்கி போட்டி தேர்வில் தேர்வாகி சென்ட்ரல் பேங்கில் அலுவலராக வேலைக்கு சேர்த்து முதுநிலை மேலளாராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நூலகத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக நூலக புரவலராகவும் உள்ளேன். தினமும் நூலகம் சென்று நூல்கள் படித்தால் தான் மனநிறைவாக இருக்கும்.

அரசு வேலை வாங்கி தந்த நூலகம்-


தினேஷ்குமார், பெரியகுளம்: 2021ல் நூலகத்தில் போட்டி தேர்வுக்கு குழுவாக படிக்க துவங்கினேன். எங்களுக்கு தனியாக மேலே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு துவக்கத்தில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, சென்னை நந்தனம் வேளாண் பொறியியல் துறையில் இளநிலை அலுவலராக பணியில் உள்ளேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த நூலகத்திற்கு என்றென்றும் நன்றி கூறுகிறேன்

9200 உறுப்பினர்கள்


நூலகர் சவடமுத்து கூறுகையில்: வாடகை கட்டடத்தில் செயல்பட்ட இந் நூலகம் பல ஆண்டுகளாக அரசு கட்டடத்தில் இயங்குகிறது.20 நூலக உறுப்பினர்களுடன் துவங்கி தற்போது 9,200 உறுப்பினர்கள் உள்ளனர்.

ரூ.1000 செலுத்தி 336 பேர் நூலகப் புரவலராகவும், ரூ.5 ஆயிரம் செலுத்தி 8 பேர் பெரும் புரவலர்களாக உள்ளனர். பெரியகுளம் பகுதி மக்கள் வாசிப்பு பழக்கமும், நூல்களை நேசிக்கும் பழக்கம் உடையவர்கள். அதனால் நுாலக ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி நோக்கிசெல்கிறது.

இங்கு போட்டித்தேர்வுக்கு படித்த 50 க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு துறைகளில், 30க்கும் மேற்பட்டோர் ராணுவம், கப்பல், விமானப்படைகளில் பணியாற்றுகின்றனர்.

விடுமுறையின்றி இயங்கும் நுாலகம்


இவர்களுக்காக மாதத்தில் 30 நாட்களும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நூலகம் திறந்திருக்கும். வெள்ளியன்று வார விடுமுறை நாட்களில் பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்விற்கு படிப்பவர்களுக்காக நூலகம் திறக்கிறோம்.

நூலக வளர்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர்கள் அன்புக்கரசன், மணிகார்த்திக் உட்பட பலர் உறுதுணையாக உள்ளனர். வரும் ஜூலை 11ல் கவிஞர் வைரமுத்து தலைமையில் நூற்றாண்டு விழா மற்றும் நூற்றாண்டு மலர் வெளியிட உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us