/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணி வெற்றி
/
மாவட்ட கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணி வெற்றி
மாவட்ட கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணி வெற்றி
மாவட்ட கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணி வெற்றி
ADDED : ஜூலை 01, 2024 06:45 AM

தேனி : தேனியில் எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் பி.ஓ.பி., அணி கோப்பையை வென்றது.
நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜூன் 28 ல் துவங்கியது. இதில் மாவட்டத்தில் இருந்து 17 அணிகள் பங்கேற்றன. 'லீக்' சுற்றுக்களில் பெற்ற வெற்றி அடிப்படையில் தேனி எல்.எஸ்., மில்ஸ் அணி, பெரியகுளம் பி.ஓ.பி., அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 95:90 என்ற புள்ளி வித்தியாசத்தில் பெரியகுளம் அணி வெற்றி பெற்றது. தேனி எல்.எஸ்., அணி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு எஸ்.பி., சிவபிரசாத், எல்.எஸ்.,மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் பரிசு வழங்கினர்.
மூன்றாவது இடத்தை கம்பம் பென்னிகுவிக் அணியும், 4ம் இடத்தை பெரியகுளம் சில்வர் ஜூப்லி அணியும் வென்றன. தொடர் நாயகன், இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதை எல்.எஸ்.,மில்ஸ் அணி வீரர் ஆகாஷ் வென்றார்.