/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தவரை விசாரிக்க அனுமதி
/
அரசு நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தவரை விசாரிக்க அனுமதி
அரசு நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தவரை விசாரிக்க அனுமதி
அரசு நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தவரை விசாரிக்க அனுமதி
ADDED : செப் 03, 2024 02:36 AM
தேனி: தேனியில் அரசு நில அபகரிப்பு வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்த தேனியை சேர்ந்த நில புரோக்கர் தங்கப்பாண்டியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி, வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டன. இதனை 2022ல் பெரியகுளத்தில் சப் கலெக்டராக இருந்த ரிஷப் விசாரணையில் கண்டறிந்தார். பின் ஆர்.டி.ஓ.,கள், தாசில்தார்கள், சர்வேயர், வி.ஏ.ஓ., அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அனைவரும் கைதாகி ஜாமினில் வெளியில் உள்ளனர்.
இந்நிலையில் ஆக., 27ல் இவ்வழக்கில் தேடப்பட்ட நில புரோக்கர் தங்கப்பாண்டி தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கெங்குவார்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் 2.5 ஏக்கரை தனது பெயரில் பட்டா தயாரித்து, அதனை மனைவி, மைத்துனருக்கு கிரைய பத்திரம் செய்து மோசடியாக விற்றுள்ளது விசாரணையில் தெரிந்தது.
தங்கப்பாண்டியனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீஸ் டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் ஆக., 30 ல் தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது.
தங்கப்பாண்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று மாலை முதல் இன்று மாலை வரை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.