/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
/
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : பிப் 28, 2025 06:42 AM

தேனி: ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே தங்கம்மாள்புரம் மணிகண்டன், தர்மராஜபுரம் கருப்பையா மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இறப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இறந்த கருப்பையாவின் மகன் சந்திரசேகரன், அவரது உறவினர்கள் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளித்தனர்.
மனுவில், 'கருப்பையா தோட்டத்தில் இருந்து மாலை வீடு திரும்புவார். வீடு திரும்பாதவரை தேடி சென்ற போது வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் அருகில் வேறு ஒருவருடைய அலைபேசி இருந்தது. எங்கள் குடும்பத்திற்கும், உறவினர் ஒருவருக்கும் சொத்து தகராறு உள்ளது.
இதனால் முன் விரோதம் கராணமாக கருப்பையா, அவரது நண்பர் மணிகண்டனை கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார்.