/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சக்கம்பட்டியில் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
/
சக்கம்பட்டியில் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
சக்கம்பட்டியில் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
சக்கம்பட்டியில் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
ADDED : செப் 10, 2024 06:08 AM

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சக்கம்பட்டியில் அடிப்படை வசதி
செய்து தர கோரி கலெக்டரிடம் மனு வழங்கினர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இலவச பட்டா, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 221 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டி சத்யாநகர் சரோஜா, பாலுமணி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், சத்யாநகரில் 15 ஆண்டுகளாக வசிக்கிறோம். இப்பகுதியில் சாக்கடை, ரோடு வசதி உள்ளிட்டவை இல்லை.
இதனால் இப்பகுதியில் வசிப்போர் சிரமத்திற்கு ஆளாகிறோம். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என இருந்தது.
போடி தாலுகா சொக்கனலை மல்லிகா, ராஜம்மாள் வழங்கிய மனுவில், இலவச வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது.