/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்களுடன் முதல்வர் முகாமில் குவிந்த மனுக்கள்
/
மக்களுடன் முதல்வர் முகாமில் குவிந்த மனுக்கள்
ADDED : ஆக 13, 2024 11:29 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி.ராஜகோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், திம்மாசநாயக்கனூர், புள்ளிமான்கோம்பை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் புள்ளிமான்கோம்பை மண்டபத்தில் நடந்தது. தேனி கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ., மகாராஜன் முகாமினை பார்வையிட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். முகாமில் தாசில்தார் கண்ணன், பி.டி.ஓ., சந்திரபோஸ், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், ஊராட்சித் தலைவர்கள் வேல்மணி (ராஜகோபாலன்பட்டி), அழகுமணி (டி.சுப்புலாபுரம்), அட்ஷயா (திம்மரசநாயக்கனூர்), தவசி (புள்ளிமான்கோம்பை) கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.