/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்ந்து 350வது வாரங்களாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை -சோலைக்குள் கூடல் அமைப்பிற்கு குவியும் பாராட்டு
/
தொடர்ந்து 350வது வாரங்களாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை -சோலைக்குள் கூடல் அமைப்பிற்கு குவியும் பாராட்டு
தொடர்ந்து 350வது வாரங்களாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை -சோலைக்குள் கூடல் அமைப்பிற்கு குவியும் பாராட்டு
தொடர்ந்து 350வது வாரங்களாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை -சோலைக்குள் கூடல் அமைப்பிற்கு குவியும் பாராட்டு
ADDED : மே 07, 2024 06:11 AM

கூடலுார்: கூடலுாரில் தொடர்ந்து 350 வது வாரங்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்துவரும் சோலைக்குள் கூடல் அமைப்பினரை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பு 2016 டிசம்பரில் துவக்கப்பட்டது. முதல் 6 மாதங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவது முதல் பணியாக இருந்தது. 4500 கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். அதன்பின் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான வெயில் காலங்களில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றனர்.
தொடர்ந்து 350 வது வாரங்களாக செய்து வரும் இப்பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர்.
நிர்வாகிகள் கூறும்போது:
சோலைக்குள் கூடல் அமைப்பு 2016 டிசம்பரில் துவக்கி 6 மாதங்கள் கருவேல மரங்களை அகற்றினோம். 2017 மே மாதத்தில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு கலெக்டர், எஸ்.பி., தலைமையில் முதன் முதலாக மரக்கன்றுகளை நடவு செய்தோம். பெட்ரோல் பங்க் ரோடு, அரசு விதைப்பண்ணை ரோடு, மெயின் பஜார், வடக்கு ரத வீதி, கீழக் கூடலுார், நடுத்தெரு, கருநாக்கமுத்தன்பட்டி ரோடு, ஒட்டான்குளம் கண்மாய் கரைப் பகுதி, 18ம் கால்வாய் கரைப்பகுதி என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இதுவரை நடவு செய்துள்ளோம். இதில் முக்கியமாக வாகை, புங்கை, வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, வில்வம் உள்ளிட்ட மரக்கன்றுகள் அதிகம். அமைப்பில் ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர்.
மரக்கன்றுகளை நடுவது மட்டுமின்றி அதனை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். கடுமையான வெயில் காலங்களில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றி மரக்கன்றுகளை காப்பாற்றி வருகிறோம். இதற்காக 2022--20-23 ம் ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பசுமைச் சாம்பியன் விருது மற்றும் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலை தேனி மாவட்ட கலெக்டர் மூலம் கிடைத்தது. காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பிரஜா குமார் கிணற்றுடன் சேர்ந்த 20 சென்ட் நிலத்தை நாற்றுகள் வளர்ப்பதற்காக கொடுத்துள்ளார்.
8 ஆயிரம் பனை விதைகளை விதைத்ததுடன் 12 ஆயிரம் விதைப்பந்துகளை தூவி உள்ளோம். பிறந்தநாள் விழா, திருமண விழா மற்றும் சுற்றுச்சூழல் தினங்களில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம், என்றனர்.