/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
30 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு
/
30 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு
30 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு
30 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 01, 2024 05:46 AM

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுகளை எடுத்து அதனை உயிரினங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனாக மாற்றி தருகின்றன. மரங்கள் வளர்ப்பது, அதன் முக்கியத்துவம் பற்றி பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மரங்கள் இல்லை என்றால் சுத்தமான காற்று மட்டும் இன்றி போதிய மழையும் இன்றி பூமியின் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு சென்றுள்ளன. அந்த நிலை வராமல் இருக்க பல்வேறு அமைப்பினர் இணைந்து தற்போது மரக்கன்றுகள் நடவு செய்வதை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அரசு சார்பிலும் புவி வெப்பமயமாவதை குறைக்க பொது மக்களுக்கு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்தல், மஞ்சள் பை அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள், மாணவர்கள் இணைந்து குளங்கள், கண்மாய்கள், ஆற்றங்கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவராகமாவட்டத்திலும் பல தன்னார்வல அமைப்புகள் மரக்கன்றுகளை நடவு செய்து, இந்நிலையில் 'மரங்கள் பூமியின் வரங்கள்' என, அவற்றை வளர்த்து பாதுகாத்து பலரையும் வாழவைத்து வருகிறார். போடியை சேர்ந்த முருகன். இவர் கடந்த 30 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வளர்த்து வருகிறார்.
புத்துயிர் பெற்ற 13 மரங்கள்
முருகன், விவசாயி, போடி : நான் 8ம் வகுப்பு படித்துள்ளேன். சிறுவயதில் இருந்து மரக்கன்றுகள் நடவேண்டும் என்பது ஆசை.
1990ல் போடி பரமசிவன் கோயில் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து வந்தேன். அப்போது ஒரு முதியவர் கூறிய அறிவுரையின் படி பனை விதைகள் நடவு செய்ய துவங்கினேன். கடந்த 34 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பனைவிதை, மரக்கன்றுகள் நடவு செய்து உள்ளேன். முதலில் பனை விதைகள் நடவு செய்யும் போது பல விதைகள் முளைப்புத்திறன் குறைந்தும், முளைக்காமலும் போயின. இதனால் தற்போது எனது தோட்டத்தில் பனை விதைகளை நடவு செய்து, கன்றுகளாக உற்பத்தி செய்து நடவு செய்கிறேன். மரக்கன்றுகள் உற்பத்தி செய்கிறேன்.
இதனை பள்ளி, கல்லுாரிகளில் நடவு செய்யவும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வழங்கி வருகிறேன். போடி பகுதியில் ரோட்டின் ஓரங்களில் இருந்து 13 மரங்களை வேருடன் அகற்றி, மற்ற இடங்களில் வேருடன் மறு நடவு செய்து உள்ளேன். விழிப்புணர்வு ஏற்படுத்த எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக உள்ளனர். மரங்கள் நடவு செய்ய தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் பலர் உதவி செய்கின்றனர். விடுமுறை தினங்களில் பராமரிப்பு பணிக்கு உடன் வருகின்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். அதனால் பள்ளிகளில் இருந்து பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.', என்றார்.
குறுங்காடுகள் அமைக்க திட்டம்
முருகேசன், ஆசிரியர், நாடார் மேல்நிலைப்பள்ளி, போ.திருமலாபுரம்: பள்ளியில் என்.எஸ்.எஸ்., மூலம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், நீர் மேலாண்மை பள்ளி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்கள், இளைய தலைமுறையினரிடம் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
பொது மக்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். போடி அருகே அரசு நிலத்தில் தன்னார்வலர்கள் இணைந்து குறுங்காடுகள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன., என்றார்.