/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
/
தேனியில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
ADDED : ஜூலை 31, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.
நகரில் வருவாய்த்துறை, போலீசாரின் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை போலீசார் அகற்ற எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டிருந்தார்.
தேனி இன்ஸ்பெக்டர் உதயக்குமர், எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், பெத்தாட்சி விநாயகர் கோயில் ரயில்வே கேட், எஸ்.பி.ஐ., வங்கி முன், பெரியகுளம் ரோடு என்.ஆர்.டி., ரோடு சந்திப்பு, பெரியகுளம் ரோடு, ஜி.ஹெச்., ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட 25 பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர்.