ADDED : ஜூன் 01, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ் 2 மாணவி.அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ப்ளஸ் 2 மாணவர். பெரியப்பா வீட்டில் குடியிருந்த அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார்.
குடும்பத்தாரிடம் தங்கை போல் பழகுவதாக தெரிவித்தார். சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் இருவரும் நேரிலோ, அலைபேசியில் பேசக்கூடாது என கண்டித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி சோர்வாக இருந்துள்ளார். டாக்டரிடம் பரிசோதனை செய்ததில் சிறுமி 6 மாதம் கர்ப்பமானது தெரிய வந்தது. பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.