/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டுகள் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : செப் 05, 2024 05:18 AM

தேனி : தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூடலுார் முனியாண்டி கோயில் தெரு முதியவர் நடராஜனுக்கு 84, இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2020 ல் தோழியருடன் தெருவில் விளையாடிய சிறுமியிடம் மிட்டாய் கொடுத்து நடராஜன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதில் சிறுமி உடலில் காயங்கள் ஏற்பட்டன. தப்ப முயன்ற சிறுமியை வெளியே விடாமல் அவர் துன்புறுத்தினார்.
சிறுமியை நடராஜன் அழைத்து சென்ற விபரத்தை மற்ற சிறுமிகள் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நடராஜன் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். போக்சோ, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் விவேகானந்தன் ஆஜரானார்.
நடராஜனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு பிரிவில் ஆயுள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.