/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி இருவர் மீது போலீஸ் வழக்கு

ADDED : மே 28, 2024 03:34 AM
ஆண்டிபட்டி, : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி செய்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சற்குணம் 61, தனது மூத்த மகன் சதீஷ்குமார் என்பவருக்கு ராமேஸ்வரம் கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு அழைப்பு கடிதம் வந்தது குறித்து ஆண்டிபட்டி காமராஜர் நகரைச்சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் தெரிவித்துள்ளார். கருப்பசாமி சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்க்கும் தனது உறவினரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன் பணமாக ரூபாய் ஒரு லட்சம் கொடுக்க வலியுறுத்தியதால், சற்குணம் தனது இளைய மகனின் மொபைல் போனிலிருந்து சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த உமாபதி என்பவருக்கு ரூபாய் ஒரு லட்சம் அனுப்பியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டதற்கு கொடுக்க முடியாது என இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாக சற்குணம் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருப்பசாமி, உமாபதி மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.