/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் இருவரிடம் போலீஸ் விசாரணை
/
மேகமலையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் இருவரிடம் போலீஸ் விசாரணை
மேகமலையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் இருவரிடம் போலீஸ் விசாரணை
மேகமலையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் இருவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 29, 2024 02:10 AM
கம்பம்:தேனி மாவட்டம், மேகமலை ஏலத்தோட்டத்திற்குள் ரூ.12 லடசம் மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
மேகமலையில் உள்ள கம்பத்தை சேர்ந்த சித்திக் ஏலத்தோட்டத்தை சின்னமனுார் கரிச்சிபட்டியை சேர்ந்த முருகன் 40, கருப்பசாமி 42, குத்தகைக்கு பெற்றனர்.
தோட்டத்தை மேற்பார்வை செய்ய கேரளா, நெடுங்கண்டத்தை சேர்ந்த மேத்யூ ஜோசப், சின்னமனுார் மணி (தற்போது மதுரையில் இருப்பு) ஆகியோரை வேலைக்கு வைத்தனர்.
இந்த தோட்டத்தில் கஞ்சா சாகுபடி செய்து வளர்த்து வருவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேகமலை ரேஞ்சர் புஷ்பராஜ், ஹைவேவிஸ் போலீசில் புகார் செய்தார்.
சின்னமனுார் எஸ்.ஐ., சுல்தான் பாட்சா தலைமையிலான போலீசார் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் குழிக்காடு என்ற இடத்தில் ஏலத்தோட்டத்திற்குள் சாகுபடி செய்து முழு அளவில் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 60 கஞ்சா செடிகளை அழித்தனர். ஒவ்வொரு செடியிலும் 2 கிலோ கஞ்சா இருந்தது.
இது தொடர்பாக முருகன், கருப்பசாமியை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேத்யூ ஜோசப், மணியை தேடி வருகின்றனர். அழிக்கப்பட்ட செடிகளின் மதிப்பு ரூ.12 லட்சம். இவ் வழக்கை எல்லை பிரச்னையால் எந்த போலீஸ் ஸ்டேஷன் விசாரிப்பது என்பதில் சின்னமனுார், ஹைவேவிஸ், வருஷநாடு ஸ்டேஷன்களுக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்து விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

