/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் செய்திகள்...லோகோ வைக்கவும்.
/
போலீஸ் செய்திகள்...லோகோ வைக்கவும்.
ADDED : மே 08, 2024 05:11 AM
பெண் மீது கந்துவட்டி வழக்கு
போடி: கருப்பசாமி கோயில் தெரு ரேகா 40. இவர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் முருகேஸ்வரியிடம் 45, ஓராண்டுக்கு முன் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். ரூ.10 வட்டி வீதம் ரூ.84 ஆயிரம் திரும்ப செலுத்தி உள்ளார். அதன் பின் ரூ. ஒரு லட்சத்தி 20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேகாவை, முருகேஸ்வரி தகாத வார்த்தையால் பேசி, வட்டியுடன் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு மிரட்டினார். எஸ்.பி., யிடம் ரேகா புகார் அளித்தார். அவரது உத்தரவில் முருகேஸ்வரி மீது போடி டவுன் போலீசார் கந்துவட்டி கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்துகளில் இருவர் பலி
தேவதானபட்டி: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் தெரு வி.முத்துப்பாண்டி 28. பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவரது டூவீலரை நண்பர் எஸ்.முத்துப்பாண்டி 28, ஓட்டினார். நடுவில் வி.முத்துபாண்டி, பின்புறம் ரஞ்சித்குமார் 28, அமர்ந்து சென்றனர். காட்ரோடு கோயில் அருகே பாலத்தில் டூவீலர் மோதி மூவரும் விழுந்தனர். 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள் வி.முத்துப்பாண்டியை பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த மற்ற இருவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் எஸ்.முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
தேவதானப்பட்டி: எருமலை நாயக்கன்பட்டி இந்திரா காலனி தனசேகரன் 38. தேவதானப்பட்டியில் டூவீலரில் பெட்ரோல் பல்கில் பெட்ரோல் நிரம்பி விட்டு வலதுபுறம் 'இண்டிகேட்டர்' ஆன் செய்தார். தேனி- திண்டுக்கல் பைபாஸ் ரோடு, தேவதானப்பட்டி- பொம்மிநாயக்கன்பட்டி பிரிவில் திரும்பும் போது அதே திசையில் வேகமாக வந்த டூவீலர் தனசேகரன் மீது மோதியது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது, பரிசோதித்த டாக்டர் தனசேகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கெங்குவார்பட்டியைச் சேர்ந்த நவீன் குமாரிடம் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து மாற்றுத்திறனாளி பலி
பெரியகுளம்: கீழ வடகரை காந்திநகர் ஆதம்மாள் 55. இவரது மகன் மாற்றுத்திறனாளி தமிழ்செல்வன் 27. இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தமிழ்செல்வனை பாம்பு கடித்தது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வன் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
போடி: அணைக்கரைப்பட்டி சதீஷ் 39. வீரபாண்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் 20. இருவரும் தேனி அருகே வயல்பட்டியை சேர்ந்த காயத்ரியிடம் கஞ்சா வாங்கியுள்ளனர். அதனை விற்பனை செய்வதற்காக போடி அணைக்கரைப்பட்டி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று பாலத்தில் நின்றிருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற போடி தாலுகா போலீசார் சதீஷ், ஜெகதீஸ்வரன் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

