sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : மே 28, 2024 04:05 AM

Google News

ADDED : மே 28, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோஷ்டி தகராறு: 6 பேர் மீது வழக்கு

தேவாரம்: டி.சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் ஷீலா ஜெயராணி 40., இவர் இதே பகுதியில் வசிக்கும் ஆமலோர்பவம், ஆரோக்கிய ப்ரித்தா, அந்தோணி, ஜோசப் தினகரன் ஆகியோரிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு 5 சென்ட் இடம் கிரயம் வாங்கி, வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

தற்போது குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதனை அமலோர்பவம், ஆரோக்கிய பிரித்தா அந்தோணி, ஜோசப் தினகரன் ஆகியோர் விற்பனை செய்யவிடாமல் தடுத்தும், திட்டி கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். ஷீலா ஜெயராணி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஷீலாஜெயராணி இவரது கணவர் மேஷன் இருவரும் சேர்ந்து இதே பகுதியில் வசிக்கும் ஆந்தினி 68. வீட்டிற்குள் நுழைந்து அவரை திட்டி அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.ஷீலா ஜெயராணி புகாரில் அமலோர்பவம், ஆரோக்கிய ப்ரீத்தா உட்பட 4 பேர் மீதும், ஆந்தினி புகாரில் ஷீலா ஜெயராணி, மேஷன் ஆகிய 2 பேர் மீதும் தேவாரம் போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர்.

இரு தரப்பினர் மோதல்இருவர் காயம்: 5 பேர் கைது

கடமலைக்குண்டு: அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி 34, இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கழிவுநீர் பொதுப் பாதையில் செல்வது தொடர்பாக முன்விரோதம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது சதீஷ்குமாரின் வீட்டிற்கு வந்திருந்த மஞ்சனூத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்த ஜெயலட்சுமி மற்றும் அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை அசிங்கமாக பேசி மண்வெட்டி, கம்பியால் தாக்கி உள்ளனர்.

ஜெயலட்சுமி வாசககுமார் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கடமலைக்குண்டு போலீசில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் குமரேசன் 32, அபிமன்யு 34, விக்னேஷ் 30, மனோஜ் 32, மதன்குமார் 34, ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள தனபாண்டி 36, ராமர் 38, ஆதி 32, ஜெயக்குமார் 32 ஆகியோரை தேடி வருகின்றனர்.

கொடுக்கல் வாங்கல் தகராறு8 பேர் மீது வழக்கு

பெரியகுளம்: லட்சுமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெரு சதீஷ்குமார் 27. அதே தெருவைச் சேர்ந்த இவரது தாய்மாமன் பிரபாகரன் 42. அவசர தேவைக்கு சதீஷ்குமாரிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடந்த வாரம் ரூ.10 ஆயிரம் திருப்பி கொடுத்த நிலையில் பாக்கி பணம் கொடுப்பதில் தாமதமானது. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த சதீஷ்குமாரை, உன்னிடம் பணம் வாங்கினால் அதனை சரியாக கொடுக்க வேணுமா என பிரபாகரன், இவரது மகன், மனைவி விஜயலட்சுமி 37. தங்கை திலகவதி, தங்கை மகன் தினேஷ் ஆகியோர் கேட்டு கட்டையால் சதீஷ்குமாரை தாக்கினர். தடுக்க வந்த சதீஷ்குமார் தந்தை முருகன் 51. தாயார் பிரபாவதி 45. அடி விழுந்தது. தென்கரை போலீசார் பிரபாகரன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இருவரை கைது செய்தனர்.

பிரபாகரன் புகாரில்: எனது தங்கை திலகவதி, சதீஷ்குமார் வீட்டின் முன்பு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனை சதீஷ்குமார் குடும்பத்தினர் தங்களை தான் திட்டுவதாக நினைத்து, எங்களுடன் தகராறு ஈடுபட்டு கட்டையால் அடித்து காயப்படுத்தினர். இவரது புகாரில் சதீஷ்குமார், முருகன், பிரபாவதி உட்பட இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிறுமி மாயம்

ஆண்டிபட்டி: மயிலாடும்பாறை அருகே தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் 55, 4 நாட்களுக்கு முன் இவரது 15 வயது மகள் நள்ளிரவில் வீட்டை விட்டு சென்று விட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி தாலுகா குருவியம்மாள்புரம் பாண்டியன் தெற்கு தெரு ஆதி 39. டிப்பர் லாரி உரிமையாளர், டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். மே 24 ல் அரண்மனைப்புதுார் முதல் கொடுவிலார்பட்டி செல்லும் ரோட்டில் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை, அதேப்பகுதியை சேர்ந்த மூவேந்தர், சந்திரன், ஆறு நபர்கள் இணைந்து மது போதையில் லாரியை மறித்தனர். ஆதியை கீழே தள்ளி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி ஆதி அனுமதிக்கப்பட்டார், புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் எஸ்.ஐ., மணிமாறனிடம் புகார் அளித்தார். போலீசார் மூவேந்தன் , சந்திரன் 6 நபர்கள் உட்பட 8 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

எடை மேடையில் திருட்டு முயற்சி: ஐவர் மீது வழக்கு

தேனி: நாகலாபுரம் நடுத்தெரு விவசாயி முருகன் 47. மார்க்கெட் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு சொந்தமான இடத்தில் எடைமேடை அமைத்துள்ளார். மே 8 ல் முருகன் வெளியில் சென்றுவிட, மனைவி எடைமேடையில் இருந்தார். அப்போது டி.என்.60 ஏ.டி 9535 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் எடைமேடையில் லாரியை நிறுத்திவிட்டு, உடன் வந்த நால்வர் எடை பார்க்க வேண்டும் என மீனாவிடம் தெரிவித்தனர். அதற்குள் உடன் வந்தவர்களில் ஒருவர் நடைமேடையின் பாதாள அறையின் மூடியை திறந்து உள்ளே குதித்துள்ளார்.

இதனால் சத்தம் போட்ட மீனாவிடம் அந்நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டி பின் லாரியை எடுத்து சென்றனர்.

அங்கு வந்த கணவர் முருகன் பாதாள அறையில் பார்த்த போது, ஓயர்கள் சேதப்படுத்தப்பட்டு திருட்டு முயற்சி நடந்துள்ளதை குறித்து அறிந்தார். புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஐவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

--






      Dinamalar
      Follow us