வாகன விபத்தில் ஒருவர் இறப்பு
ஆண்டிபட்டி: அனுப்பபட்டியைச் சேர்ந்தவர் லுவன் ஆதித்யன் 24. பட்டப் படிப்பு முடித்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மே 30 ல் தனது டூவீலரில் ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். சம்பவ இடத்தில் ரோட்டில் நின்றிருந்த சமத்துவபுரத்தை சேர்ந்த சரவணகுமார் 33, மீது வாகனம் மோதியதில் காயமடைந்தார். ரவிச்சந்திரன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரிவாளால் வெட்டு: ஒருவர் காயம்
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறையை சேர்ந்தவர் சூர்யா 25. இவரது அத்தை மகன் பிரசாந்த் 20. இருவரும் பெற்றோர்களை இழந்ததால் பாட்டி கண்ணம்மாளுடன் வசித்து வந்தனர். சூர்யா திருமணத்திற்கு பின் மனைவியுடன், கண்ணம்மாள் வீட்டருகே தகர செட் அமைத்து வசித்தார். இரு நாட்களுக்கு முன் பிரசாந்த் இரவு 10:00 மணிக்கு சாப்பாடு போட்டு கொடுக்கும்படி பாட்டியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது சூர்யா தன்னிடம் இருந்த ரூபாய் 200 ஐ கொடுத்து கடையில் சாப்பிடச் சொல்லி உள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் பிரசாந்த் அரிவாளை எடுத்து சூர்யாவை வெட்டியதில் பலத்த காயம் அடைந்தார். அரிவாளால் வெட்டிய பிரசாந்த்தை போலீசார் தேடி வருகின்றனர்.
பாம்பு கடித்து தொழிலாளி பலி
தேனி: பங்களாபட்டி கே.எஸ்.கே., தெரு பால்பாண்டி 35. இவர் தேனி நேரு சிலை அருகே உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடையின் கோடவுனில் இருந்து தக்காளி பெட்டியை எடுக்கும் போது இடது கையில் பாம்பு கடித்தது. முதலுதவி சிகிச்சை முடித்து, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இறந்தவரின் தாய் நாகலட்சுமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜீப் விபத்தில் பெண் காயம்
தேனி: சுப்பன்செட்டி தெரு நாகராஜன் 48. இவரது மனைவி ரம்யா 38. அல்லிநகரத்தில் உள்ள தையல் கடைக்கு டூவீலரில் நாகராஜன், ரம்யா சென்றனர். அவர்களுக்கு பின்னால் வந்த ஜீப்பை கேரள மாநிலம் முக்குடில் ஷானி 58 ஓட்டி வந்தார். டூவீலர் அல்லிநகரம் பகுதியில் சென்ற போது ஜீப் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயடைந்த ரம்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நாகராஜன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.