மது பதுக்கிய இருவர் கைது
தேவாரம்: மூணாண்டிபட்டி புவனேஸ்வரன் 32. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். தேவாரம் போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை கைப்பற்றினர். போடி குலாலர் பாளையம் பாஸ்கரன் தெரு சந்திரா 60. இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை போடி டவுன் போலீசார் கைது செய்து, 7 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
ஓடை வாய்க்காலில் சிக்கி பெண் பலி
பெரியகுளம்: தென்கரை இந்திராபுரி தெரு சந்தானம் மனைவி முத்தாயி 85. கும்பக்கரை மூலத்தோப்புப் பகுதியில் ஆச்சியம்மாள் மாந்தோப்பில் காவல், தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஓடை வாய்க்காலில் சென்ற தண்ணீரில் சிக்கி பலியானார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணுக்கு இடையூறு : டிரைவர் கைது
தேனி: அல்லிநகரம் ஜெயம் நகர் செல்வி 34. கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடன் அரண்மைப்புதுார் லாரி டிரைவர் சுருளி பழகி வந்தார். இதனை தெரிந்த சுருளியின் உறவினர்கள் செல்வியை கண்டித்தனர். இதனால் சுருளியுடன் பேசுவதை செல்வி தவிர்த்தார். கோபமடைந்த சுருளி ஆக.,13 இரவு தாக்கினார். காயமடைந்த செல்வி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் சுருளியை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
பெண் மாயம்
தேனி: அல்லிநகரம் மூக்கம்மாள் 50. இவரது தங்கை மகள் கனிமொழி 19. இவரை சிறுவயதில் இருந்து மூக்கம்மாள் வளர்த்து வந்தார். வீட்டில் இருந்த கனிமொழி திடீரென மாயமானார். மூக்கம்மாள் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.