கல்லுாரி மாணவி மாயம்
தேனி: பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி அன்னமயில். இவரது மகள் சிவானி 18. இவர் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., படித்து வந்தார். உடல்நலக்குறைவால் 4 நாட்களாக கல்லுாரி செல்லாமல் இருந்தார். இந்நிலையில் ஏப்.,25ல் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அன்னமயில் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து விவசாயி பலி
தேனி: வீரபாண்டி விவசாயி அந்தோணிமுத்து 61. இவர் ஏப்.,22ல் கரும்பு தோட்டத்தில் மாடுகளை கட்டியபோது பாம்பு கடித்ததாக மகன் பாண்டியராஜனுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பாண்டியராஜன் அவரது தாய் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தோணிமுத்துவை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தோணிமுத்து சிகிச்சை பலன் இன்றி ஏப்.,26ல் இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

