நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலத்தகராறில் 6 பேர் மீது வழக்கு
தேனி: என்.ஆர்.டி., நகர் நவநீதன் 73, நடராஜன் 60, ஆகியோருக்கு அல்லிநகரம் பாண்டி கோயில் தெருவில் உள்ள காலி இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான காரை நவநீதன், ஆண்டாள், சதீஸ், பாரதி ஆகியார் கண்ணாடியை உடைத்து திருடி சென்றதாக எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். நடராஜன், கண்ணன் மிரட்டல் விடுத்ததாக நவநீதன் தேனி டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். இருவரது புகாரில் 6 பேர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
பேனர் வைத்த காங்.,நிர்வாகி மீது வழக்கு
தேனி: மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். அவரை வரவேற்று காங்., நிர்வாகி மலைச்சாமி பேனர் வைத்திருந்தார். இடையூராக பேனர் வைக்கப்பட்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்