மண்டை உடைப்பு: ஒருவர் மீது வழக்கு
தேனி: போடேந்திரபுரம் கிழக்குத்தெரு முருகன் 49. மேல்நிலை தண்ணீர் தொட்டி ஆப்பரேட்டர். அதேப்பகுதி செல்வம் 38. கடந்த ஆக., 5 மாலையில் முருகன் தண்ணீர் எடுத்துவிட சென்றார். அப்போது செல்வம் தொட்டி அருகே மது குடித்துவிட்டு பாட்டில்களை போட்டுச் சென்றார். அதனை முருகன் தட்டிக்கேட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், செங்கல்லை எடுத்து, முருகனின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த முருகன் தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரில் வீரபாண்டி போலீசார் செல்வம் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
தேனி: பாலார்பட்டி மேற்குத்தெரு முத்துக்காமன் 69. இவர் வயிற்றுவலியால் ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார். வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார்.இவரை தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: பொம்மையக்கவுண்டன்பட்டி செல்லாண்டி தெரு கேசவன் 21. இவர் கோவையில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். தனது சித்தி கலாவிற்கு சொந்தமான டூவீலரை பயன்படுத்தி வந்தார். ஆக., 3ல் இரவு வீட்டின் டூவீலரை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது டூவீலரை காணவில்லை. டூவீலரின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
தேனி: பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு ஆறுமுகம் 49. இவர் சின்னமனுார் மின்வாரியத்தில் பணி புரிந்தார். இவரது மனைவி ஞானசுந்தரி 40. ஓராண்டிற்கு முன் புற்றுநோயால் உயிரிழந்தார். ஆறுமுகம் ஆக., 6ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் தேனி கம்பம் ரோடு டைல்ஸ் கடை அருகே ரோட்டின் ஒரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.