லாட்டரி விற்றவர் கைது
தேனி: கூடலுார் அருணாச்சல் கவுடர் தெரு ஈஸ்வரன் 32. இவர் கன்னிகாளிபுரம் உள்ள தனது சலுான் கடை அருகே ரூ.2240 மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். போலீசார் அவரை கைது செய்து, லாட்டரிச் சீட்டுகள், பணத்தை கைப்பற்றினர்.
மாணவிகள் மாயம்
தேனி: சடையால்பட்டி எஸ்.வாடிபட்டி வீரசின்னம்மாள் கோயில் தெரு 17 வயது சிறுமி தேனி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் ஆக., 10ல் தாய் மில் வேலைக்கு சென்றுவிட்டார். தங்கையுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர், மறுநாள் காலையில் காணவில்லை. தாய் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: கம்பம் சுக்காங்கால்பட்டி தெரு 17 வயது சிறுமி. இவர் தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி 2ம் ஆண்டு நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். கடைக்கு சென்றுவருவதாக விடுதி நிர்வாகிகளிடம் கூறிவிட்டு சென்றவர் விடுதிக்கு வரவில்லை. இந்த விபரத்தை விடுதி நிர்வாகிகள், பெற்றோரிடம் தெரிவித்தனர். தாய் நாகரத்தினம் புகாரில், தேனி போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் தகராறு: இருவர் கைது
தேனி: ராஜஸ்தான் மாநிலம் அர்த்தண்டினை சேர்ந்த மதன்சிங் 36. நீண்ட நாட்களாக தேனியில் கடை அமைத்து அலைபேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரும், கடையில் பணிபுரியும் ஊழியர்கள் ஜித்து, பவன், செந்தில், பூரன் என்ற பெண்ணும் பணியில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி 26, கிஷோர் ஆனந்த் 27, ஆகிய இருவர், பெண்ணிடம், டெம்பர் கிளாஸ்' ஒட்டுவதற்கு பணம் எவ்வளவு எனக் கேட்டனர். அப்பெண், ரூ.500 என கூறினார். கடந்த மாதம் ரூ.300க்கு ஒட்டினோம். நீங்கள் அதிகமாக கூறுகிறீர்கள் எனக்கூறியவர்கள் பெண்ணிடம் கேலி, கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசினர்.
மதன்சிங் ரூ.300க்கு ஒட்டிக் கொடுத்து, கிளம்புங்க என்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தாக்கி, காயம் ஏற்படுத்தினர். இதனால் மதன்சிங் புகாரில், இருவரையும் தேனி எஸ்.ஐ., முருகேசன் கைது செய்தார்.

