பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தேனி: பின்னத்தேவன்பட்டி பள்ளிக்கூடத்தெரு முருகேஸ்வரி, இவரது மகள் மீனா. இருவரும் அதே பகுதியில் உள்ள ராமர் வீட்டு அருகில் அமர்ந்து வெங்காய கழிவுகளை நீக்கி கொண்டு, பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற ஜோதியம்மாள் என்னை பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் என கூறி தகராறு செய்தார். பின் பையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு முருகேஸ்வரியை வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார். முருகேஸ்வரி மகன் சிவசாமி புகாரில் அல்லிநகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவிக்கு மிரட்டல்: கணவர் மீது வழக்கு
தேனி: முல்லை நகர் கணேசன், இவரது மனைவி சிந்தனை செல்வி. இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். சிந்தனை செல்வி அவரது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார். தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர் வேனில் வேலைக்கு செல்லும் போது வேனின் ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தி மனைவிக்கு கணேசன் கொலை மிரட்டல் விடுத்தார். சிந்தனை செல்வி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் திருட்டு: வாகனங்கள் பறிமுதல்
தேனி: மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையில், அதிகாரிகள் பொம்மையகவுண்டன்பட்டி பிரிவில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த இரு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். லாரிகளில் அனுமதியின்றி 7 யூனிட் மண் திருடி சென்றது கண்டறியப்பட்டது. லாரிகளை அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் அளித்தனர். உதவி இயக்குனர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தகராறில் 3 பேர் மீது வழக்கு
தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு விக்னேஷ். இவரது உறவினர் உதயகுமார். இருவருக்கு சொத்து தொடர்பாக பிரச்னை இருந்தது. பூதிப்புரம் வளையபட்டி பிரிவில் இருவரும் தாக்கி காயமடைந்தனர். விக்னேஷ் புகாரில் உதயகுமார், அவரது தந்தை பெரியசாமி மீதும், உதயகுமார் புகாரில் விக்னேஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
பெண் மாயம்
தேனி: ரத்தினம் நகர் ஷாஜகான், இவரது மகள் கிஷோர் ஜஹானா 32. செப்., 12ல் வீட்டில் குடும்பத்துடன் துாங்கி கொண்டிருந்தனர். காற்று வரவில்லை என ஷஜகான் மனைவி வீட்டின் ஹாலில் வந்து பார்த்தார். அங்கு துாங்கிகொண்டிருந்த மகள் கிஷோர் ஜஹானா காணவில்லை. தந்தை புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.