ADDED : மார் 09, 2025 04:01 AM
மாணவி மாயம்
தேனி: தேவாரம் டி.மீனாட்சிபுரம் லிங்கம்மாள். இவரது மகள் பாண்டிதீபா 22. இவர் தேனி அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் படித்து வந்தார்.
தேர்வு எழுத தாயுடன் வந்தார். பழைய பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறி சென்றவர் காணாமல் போனார். லிங்கம்மாள் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
தேனி:அன்னஞ்சி முனுசாமி கோவில் தெரு சரவணக்குமார். அடிக்கடி அலைபேசியில் பேசி வந்தார். இவரது தாய் அலைபேசியை அவரிடமிருந்து பறித்து வைத்தார். இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என மனைவி பிரியங்காவிடம் மாமியார் தெரிவித்தார். பிரியங்கா விசாரித்த போது பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சரவணக்குமார் சென்றது தெரிந்தது. கணவனை மீட்டு தரக்கோரி மனைவி கொடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
தேனி: சொக்கத்தேவன்பட்டி மீனாட்சிசுந்தரம் 48. ஓராண்டாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மீனாட்சி சுந்தரம் இறந்தார். இவரது மனைவி திவ்யா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.