நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் தற்கொலை
தேனி: வெங்கடாசலபுரம் சவளப்பட்டி ராமசாமி 62. அப்பகுதியில் சலுான் கடை நடத்தி வந்தார். கடையில் போதிய வருவாய் இல்லை. இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது மனைவி வாசுகி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். வாசுகி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து முதியவர் பலி
தேனி: சத்திரப்பட்டி வடக்கு தெரு விவசாயி பொன்னுசாமி 69. தோட்டத்தில் இருந்த மாடுகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது பாம்பு கடித்தது. இதனை வீட்டில் இருந்து உறவினர் ராஜவேலுவிடம் பொன்னுசாமி தெரிவித்தார். உடனே டூவீலரில் அழைத்து சென்று பொன்னுசாமியை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜவேல் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.