/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் செய்திகள்.....கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
/
போலீஸ் செய்திகள்.....கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
போலீஸ் செய்திகள்.....கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
போலீஸ் செய்திகள்.....கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
ADDED : ஆக 26, 2024 06:55 AM
தேனி: மூணாறு பள்ளிவாசல் எஸ்டேட் ராஜம்மாள் 52. இவரது தாய் குழுமாயம்மாள் தேனி அம்மாபுரத்தில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை ராஜம்மாளுக்கு எழுதி கொடுத்தார். நிலம் தொடர்பாக ராஜம்மாள் அவரின் அண்ணன்கள் பால்சாமி, பெரியசாமி, உறவினர் பாண்டியம்மாளுக்கு இடையே பிரச்னை இருந்தது.
நிலம் தொடர்பான சிவில் வழக்கில் ராஜம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பானது. இந்நிலையில் அம்மாபுரத்தில் உள்ள நிலத்தில் இருந்த வேப்பமரம், வாகை மரத்தை அண்ணன்கள், உறவினர் வெட்டினர். இதனை தட்டி கேட்ட ராஜம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். ராஜம்மாள் புகாரில் மூவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பள்ளி மாணவி மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்த தம்பதி. இவர்கள் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிக்கின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மகள்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்த வந்தனர். இந்நிலையில் தம்பதியின் ஆக., 23ல் வேலை முடித்து வீடு திரும்பிய போது மூத்த மகள் காணவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பள்ளி மாணவியின் தாய் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் காயம்
தேனி: போடி சர்ச்தெரு ராஜரத்தினம் 75, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரெஜினா. இவர்கள் போடியில் இருந்து டூவீலரில் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். மதுராபுரி அருகே சென்ற போது டூவீலரின் பின்னால் தேனி ஜவஹர்நகர் சேகர் ஓட்டி வந்த டிராவல்ஸ் பஸ் மோதியது. இதில் முன்னாள் ராணுவ வீரர், அவரது மனைவி காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி உதயகுமார் 34. செப்டிக் டேங்க் கிளினிங் வாகனம் வைத்து தொழில் செய்தார். குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்வதாக வீட்டில் மிரட்டல் விடுத்து வந்தார். இவரது மனைவி சித்ரா, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது உதயகுமார் வீட்டில் தற்கொலை செய்தார். இச்சம்பவத்தை உதயகுமாரின் தம்பி சென்றாயன், சித்ராவிற்கு தகவல் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து இறந்தவரின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் சென்றவரிடம்
வழிப்பறி : மூவர் கைது
போடி: போடி சங்கராபுரம் அருகே தர்மத்துப்பட்டி கிழக்கு தெருவில் வசிப்பவர் யுவராஜ் 23. இவர் பழனிசெட்டிபட்டியில் தனியார் பேட்டரி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலையை முடித்து விட்டு நாகலாபுரம் செல்லும் ரோட்டில் டூவீலரில் சென்றார். நாகலாபுரம் பாலம் அருகே மூன்று பேர் டூவீலரை ரோட்டில் நிறுத்தி நின்றுள்ளனர். அதில் ஒருவர் யுவராஜிடம் லிப்ட் கேட்டுள்ளார். டூவீலரை நிறுத்திய போது மூன்று பேரும் யுவராஜ் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.7200 பணத்தை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பி ஓடினர். போடி தாலுாகா போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட தேவாரம் செல்லாயிபுரத்தை சேர்ந்த சரத்குமார் 21, சுதன்குமார் 20, லட்சுமிநாயக்கன்பட்டி சதீஸ்குமார் 19, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.