/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சிலைகளில் ரசாயன பூச்சு எடுத்துச் செல்ல போலீஸ் அனுமதி மறுப்பு
/
விநாயகர் சிலைகளில் ரசாயன பூச்சு எடுத்துச் செல்ல போலீஸ் அனுமதி மறுப்பு
விநாயகர் சிலைகளில் ரசாயன பூச்சு எடுத்துச் செல்ல போலீஸ் அனுமதி மறுப்பு
விநாயகர் சிலைகளில் ரசாயன பூச்சு எடுத்துச் செல்ல போலீஸ் அனுமதி மறுப்பு
ADDED : செப் 07, 2024 06:50 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்திக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் ரசாயன கலவை இருப்பதாக கூறி பிற இடங்களுக்கு சிலைகளை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து போலீசார் ஹிந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் மூலம் 150 க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டு ஆண்டிபட்டியில் மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சிலைகளை அந்தந்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காக கிராம நிர்வாகிகள் ஆண்டிபட்டிக்கு நேற்று வந்திருந்தனர். அப்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் ரசாயன கலவை பூசப்பட்டு இருப்பதாக கூறி சிலைகளை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்று சிலைகளை எடுத்துச் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திற்கு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அனுமதிக்காக சென்றுள்ளனர்.