/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த வாலிபர்; தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்
/
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த வாலிபர்; தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த வாலிபர்; தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த வாலிபர்; தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்
ADDED : ஆக 20, 2024 07:01 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த வாலிபரிடமிருந்து அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். தீக்குளிக்க முயன்ற மூதாட்டி தடுத்து நிறுத்தி, மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் 320 மனுக்களை வழங்கினர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் கம்பம் ரோடு ஆட்டோ டிரைவர்கள் நலச்சங்கச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'பழைய பஸ் ஸ்டாண்டில் கடந்த 10 நாட்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்கள் ஏற்படும் நிலை, ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.
வழக்கமான வழித்தடத்தில் வாகனங்களை இயக்க பரிந்துரை செய்ய வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆண்டிபட்டி டி.புதுார் சக்கரையம்மாள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் உடலில் மண்ணெண்யை ஊற்றி கொண்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை காப்பாற்றி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனுவில், 'போலி ஆவணங்கள் மூலம் அவரது சொத்தை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.', என்றிருந்தது. தேனி பாரஸ்ட் ரோடு தினேஷ்பாபு. இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரது பையை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் சோதனை செய்தனர். அவரது பையில் அரிவாள் இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் குவாரி ஏலம் வழங்கக் கோரி மனு அளிக்க வந்ததாகவும், மனு அளித்த பின் தோட்டத்திற்கு செல்வதற்காக அரிவாள் எடுத்து வந்ததாக தெரிவித்தார் எனப் போலீசார் கூறினர்.
கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1.14 கோடி மதிப்பிலான கரும்பு அறுவடை இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தையல் இயந்திரங்கள் என 13 பேருக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.