/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசியல் கட்சியினர் வலை விரிப்பில் விலை போகும் சுயே., பூத் ஏஜன்ட்டுகள்
/
அரசியல் கட்சியினர் வலை விரிப்பில் விலை போகும் சுயே., பூத் ஏஜன்ட்டுகள்
அரசியல் கட்சியினர் வலை விரிப்பில் விலை போகும் சுயே., பூத் ஏஜன்ட்டுகள்
அரசியல் கட்சியினர் வலை விரிப்பில் விலை போகும் சுயே., பூத் ஏஜன்ட்டுகள்
ADDED : ஏப் 17, 2024 05:43 AM
போடி : ஓட்டுச் சாவடிகளில் பூத் ஏஜன்ட்டுகளாக அதிக நபர்களை நியமிக்க சுயே., வேட்பாளர் பூத் ஏஜன்ட்களை விலை பேசுவதில் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம், ஓட்டுக்களை கவர பணம் பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்த கட்டமாக தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடிகளுக்கு பூத் ஏஜன்ட்களை நியமனம் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
விலைபோகாத, நம்பரகரமான பூத் ஏஜென்ட்களை கட்சியினர் நியமிக்கின்றனர். சில வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகளை சரிகட்டினால் எதிர்ப்பு இன்றி அடுத்தவர் ஓட்டுக்களையும் , ஓட்டளிக்க வராதவர்களின் ஓட்டுக்களையும் சூழலுக்கு ஏற்ப பதிவு செய்யலாம் என சில கட்சிகள் கருதுகின்றனர்.
தங்களுக்கு சாதகமான சுயே., வேட்பாளர்களின் பூத் ஏஜென்ட் படிவங்களை பெற்று அதற்கு ஏஜன்ட்டுகளாக கட்சியினரை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சுயே., வேட்பாளர்களின் பூத் ஏஜன்ட்களை விலை பேச கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சில சுயே., வேட்பாளர்கள் பிரசாரம் செய்த நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் கிடைக்கும்.
ஆனால் வெற்றி பெற முடியாது என்பது தெரியும். எனவே, கட்சியினர் கவனிப்பிற்கு சம்மதித்து பூத் ஏஜன்ட்டுகளை வழங்க சிலர் சம்மதித்துள்ளனர். சுயே., வேட்பாளர்களது பூத் ஏஜன்ட்க்கு இன்ன தொகை என கவனித்து விலை பேசும் நிலையில் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

