ADDED : ஜூன் 16, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று ஆனிமாதம் பிறப்பை முன்னிட்டு சிவன், ஞானாம்பிகை அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீராம் பூஜைகள் செய்தார். வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி மாதம் துவக்கம் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜப்பெருமாள், மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.