ADDED : ஏப் 18, 2024 06:13 AM

தேனி: லோக்சபா தேர்தலில் புதிய நடைமுறையாக தபால் ஓட்டுகள் திருச்சி எடுத்து செல்லப்பட்டன. அங்கிருந்து தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. சொந்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார் தபால் ஓட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு சொந்த மாவட்டங்களில் இருந்து தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த காலங்களில் தபால் ஓட்டுகள் பதிவு செய்து தபாலில் அனுப்பபட்டன.
இந்த தேர்தலில் புதிய நடைமுறையாக தபால் ஓட்டு சீட்டுகள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இதனால் அலுவலர்களுக்கு கூடுதல் அலைச்சல், தேர்தல் ஆணையத்திற்கு வீண் செலவு ஏற்பட்டது. இதனை தவிர்க்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திருச்சி தபால் ஓட்டுகளை கொண்டு வர உத்தரவிடப்பட்டது.
இதன்படி தேனி மாவட்டத்தில் இருந்து அரசு அலுவலர்களின் 313, போலீசாரின் 361 என மொத்தம் 674 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டது.
அதனை தொகுதி வாரியாக பிரித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் திருச்சி கொண்டு சென்றனர். அங்கிருந்து நமது மாவட்டத்திற்கான தபால் ஓட்டுகள் சேகரித்து கொண்டு வரப்பட உள்ளது.

