ADDED : ஆக 24, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் 34. அகமலைப்பகுதி போஸ்ட்மேனாக உள்ளார். டூவீலரில் தேனிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகே வரும்போது எதிரே வந்த டூவீலர் சதீஷ்குமார் மீது மோதியது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சதீஷ்குமார் அனுமதிக்கப்பட்டார்.
தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய சருத்துப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முத்துராசுவிடம் 55. விசாரணை செய்து வருகின்றனர்.-

