/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணியிடங்கள் காலி பத்திரப்பதிவு துறையில் ஆறு சார்-பதிவாளர் :பொறுப்பு அலுவலர்களால் பதிவுகள் தாமதம்
/
பணியிடங்கள் காலி பத்திரப்பதிவு துறையில் ஆறு சார்-பதிவாளர் :பொறுப்பு அலுவலர்களால் பதிவுகள் தாமதம்
பணியிடங்கள் காலி பத்திரப்பதிவு துறையில் ஆறு சார்-பதிவாளர் :பொறுப்பு அலுவலர்களால் பதிவுகள் தாமதம்
பணியிடங்கள் காலி பத்திரப்பதிவு துறையில் ஆறு சார்-பதிவாளர் :பொறுப்பு அலுவலர்களால் பதிவுகள் தாமதம்
ADDED : செப் 08, 2024 04:59 AM
தேனி, செப்.8- மாவட்டத்தில் ஆறு சார்-பதிவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கூடுதல் பொறுப்பில் தலைமை உதவியாளர்கள் சார்பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு அலுவலர்களால் பதிவுகள் தாமதம், அலைக்கழிப்பு தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.
அசையா சொத்துக்களான நிலம், மனை, வீடு ஆகியவை கிரையம், ஒத்தி,தானம், பாகபிரிவினை ,அதனை மீட்டுதல் திருமணங்கள் பதிவு செய்தல், சங்க பதிவு, அரசு வழிகாட்டுதலை பின்பற்றி நிலங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்வது உள்ளிட்டவை பத்திர பதிவுத்துறையின் முக்கிய பணியாகும்.
மாவட்டத்தில் பெரியகுளம் 1,2, தேனி, ஆண்டிபட்டி, கடமலைகுண்டு, சின்னமனுார், போடி, கம்பம், உத்தமபாளையம், தேவாரம் என 10 ஊர்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகிறது. தேனியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. சார்பதிவாளர் அலுவலங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். சார்பதிவாளர்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம், கம்பம், தேவாரம், ஆண்டிபட்டி, பெரியகுளம் -2 ஆகிய 6 அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த ஆறு நகரங்களிலும் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும். இங்கு சார்பதிவாளர் இல்லாததால் தலைமை உதவியாளர்களுக்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டு பத்திர பதிவு செய்யப்படுகிறது. இவர்கள் பொறுப்பு அலுவலர்கள் என்பதால் பதிவில் எந்த ரிஸ்க்கும் எடுத்து கொள்வதில்லை. இதனால் பதிவுகள் தாமதம், பொது மக்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக புகார் கூறுகின்றனர். அதே நேரத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 சார்பதிவாளர்கள் கூடுதலாக உள்ளனர். இவர்கள் நிர்வாகம், அலுவலகம் என பல்வேறு பிரிவுகளை கவனித்து வருகின்றனர். காலியிடங்களில் சார்பதிவாளர்களை நியமித்து பத்திர பதிவுகளை விரைந்து பதிவு செய்ய வேண்டும்என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பத்திர பதிவுத்துறையினர் கூறுகையில், ' சார்பதிவாளர்கள் இன்றி இயங்கும் பிரச்னை தேனி மாவட்டத்தில் மட்டும் இல்லாது, மாநிலம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது,' என்றனர்.