ADDED : ஜூன் 23, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் தலைப்பில் கூட்டு பிரார்த்தனை நடந்து வருகிறது.
பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் என்ற தலைப்பில் கூட்டு பிரார்த்தனை ஜூன் 17ல் துவங்கியது. தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை நடக்கிறது. கிருஷ்ணர், ராதை, மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
முரளிதர சுவாமி சிஷ்யர் ஹரிஹர சுப்ரமணியன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனையில் ஸ்ரீபாரத்ஜி பங்கேற்று பேசுகிறார். திருவிளக்கு பூஜை நடக்கிறது.-