sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்: 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' கண்காணிப்பு

/

தேனி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்: 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' கண்காணிப்பு

தேனி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்: 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' கண்காணிப்பு

தேனி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்: 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' கண்காணிப்பு


ADDED : ஏப் 18, 2024 05:56 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நாளை(ஏப்.,19) நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிபட்டி, போடி, கம்பம், பெரியகுளம் (தனி), சோழவந்தான்( தனி), உசிலம்பட்டி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதியில் 1788 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் ஆண்கள் 7.95 லட்சம், பெண்கள் 8.24 லட்சம், இதரர் 218 என மொத்தம் 16,20,419 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

தொகுதியில் பதட்டமானவையாக 353 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் மற்றும் நுண்மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப்கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கலாம். ஓட்டுச்சாவடிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் 7 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஓட்டுச்சாவடியில் இருக்க வேண்டும்:

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று காலை தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் பயிற்சி வழங்கி பணி ஆணை வழங்கப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு மேல் சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். மாலை 5:00 மணிக்கு முன்னதாக அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்றதும் அதனை மொபைல் செயலில் பதிவேற்ற செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் 127 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 10 முதல் 14 ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வசதியாக சாய்தளம், சக்கர நாற்காலி, குடிநீர் வசதி தயார் நிலையில் உள்ளது. மலைப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் இணைய வசதி இல்லாத இடங்களில் ஓட்டுப்பதிவு பற்றி தகவல் தெரிவிக்க போலீஸ் வாக்கி டாக்கி பயன்படுத்த அனுமதிக்கபட்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சீரமைக்க பெல் இன்ஜினியர் மாதவ் தலைமையில் தொகுதிக்கு தலா இரு நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us