/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விலை உயர்வால் பயனில்லை; ஏலக்காய் விவசாயிகள் குமுறல்
/
விலை உயர்வால் பயனில்லை; ஏலக்காய் விவசாயிகள் குமுறல்
விலை உயர்வால் பயனில்லை; ஏலக்காய் விவசாயிகள் குமுறல்
விலை உயர்வால் பயனில்லை; ஏலக்காய் விவசாயிகள் குமுறல்
ADDED : ஜூன் 04, 2024 06:04 AM
கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 2019 ல்சராசரி விலை கிலோ ரூ. 7 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பின் மளமளவென விலை சரிய துவங்கியது.
சராசரி விலை கிலோவிற்கு ரூ.1000 ற்கும் கீழ் இறங்கி ஒரு கட்டத்தில் ரூ.600 முதல் 700 வரைக்கும் வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
கிலோவிற்கு சராசரி விலை ரூ.1300 முதல் ரூ.1500 வரை கிடைத்தால் ஒரளவிற்கு பாதிப்பிலிருந்து மீளலாம். ஆனால் ரூ.ஆயிரத்திற்கும் கீழ் என்ற நிலையில் விவசாயிகள்கவலையில் இருந்தனர்.
ஆனால் இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே ஏலக்காய் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சராசரி விலை தற்போது கிலோவிற்கு ரூ 2400 ஐ தொட்டு நிற்கிறது.
கடும் வெப்பம், தற்போது மழை என்ற நிலையில் பெரும்பாலான தோட்டங்களில் செடிகள் சாய்ந்து விட்டன. மறு நடவு செய்யும் நிலை எழுந்துள்ளது.வரும் சீசன் இயல்பாகஆகஸ்ட்டில் துவங்க வேண்டும்.
ஆனால் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக செப்.,இறுதிக்கு செல்லும் என்கின்றனர். அய்யர் பாறை, சுல்தானியா உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செடிகள் அழிந்து விட்டது.
எனவே இந்த விலை உயர்வால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பயனில்லை என்கின்றனர்.