/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை போட்டி
ADDED : செப் 18, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் துவங்கியது. பள்ளி பிரிவில் நடந்த போட்டிகள் முடிந்தது. நேற்று கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் துவங்கியது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த கூடைப்பந்து, வாலிபால், உயரம் தாண்டுதல், கால்பந்து, கபடி, தடை தாண்டுதல், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் கல்லுாரி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இன்றும் கல்லுாரி பிரிவில் போட்டிகள் நடக்கிறது.