/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் அருகில் தனியார் மது பார் அனைத்து ஜாதி கூட்டமைப்பு எதிர்ப்பு

ADDED : ஆக 08, 2024 05:43 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலிற்கு அருகில் தனியார் மதுபார் அமைக்க அனைத்து ஜாதி கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதியை ரத்து செய்ய முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
உத்தமபாளையத்தில் பிரசித்தி பெற்ற காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலிற்கு அருகில் 100 மீட்டருக்குள் தனியார் மது பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார் அமைக்க உள்ள இடத்திற்கு மிக அருகில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , பஸ் ஸ்டாண்ட் , 2 பெட்ரோல் பங்குகள் உள்ளது. திருமண மண்டபங்கள் அடுத்த தலைவாசலாக உள்ளது. கோயிலிற்கு மிக அருகில் அமைக்கப்படுவதால் அனைத்து ஜாதிகளை சேர்ந்த கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஞானாம்பிகை கோயில் தெரு மறவர் சங்க தலைவர் சுருளி கூறுகையில்,
மனிதாபிமானம் இல்லாமல் பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயிலிற்கு அருகில் பார் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதனால் பக்தர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். உடனடியாக அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பி உள்ளோம்.
அனைத்து ஜாதி பிரதிநிதிகள் கொண்டு ஆலோசனை செய்யவும், கலெக்டரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
அனுமதி ரத்து செய்யப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த ஊரின் பொதுமக்களும் திரண்டு போராட்டம் நடத்த தயாராகி வருகின்றோம் என்றார்.