/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரிக்கு சிறந்த அணிக்கான பரிசு
/
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரிக்கு சிறந்த அணிக்கான பரிசு
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரிக்கு சிறந்த அணிக்கான பரிசு
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரிக்கு சிறந்த அணிக்கான பரிசு
ADDED : ஆக 10, 2024 06:41 AM
பெரியகுளம் : காரைக்காலில் நடந்த மாநில விளையாட்டு போட்டிகளில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணி சிறந்த அணிக்கான பரிசை வென்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்லூரி அணிகள் மற்றும் காரைக்கால் வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், காரைக்கால் வேளாண் கல்லூரியில் இரு நாட்கள் நடந்தது. இதில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வாலிபால் அணி (வீராங்கனைகள்) 4 ம் இடத்தையும், ஒட்டு மொத்த நன்னடத்தைக்கான முதல் பரிசினை வென்றனர். கால்பந்தாட்ட போட்டியில் நான்காம் ஆண்டு மாணவர் சங்கரன், வாலிபால் போட்டியில் நான்காம் ஆண்டு மாணவி வானதி, மாணவர் ஜீவா, பூப்பந்தாட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவர் திலீப், மூன்றாமாண்டு மாணவி வித்யா ஆகியோர் மாநில போட்டிகளில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் பரிசுகளை பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை கல்லூரி முதல்வர் ராஜாங்கம், உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.