/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பு; தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல் கம்பம் பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
/
பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பு; தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல் கம்பம் பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பு; தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல் கம்பம் பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பு; தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல் கம்பம் பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 30, 2024 12:25 AM
கம்பம் : பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடி அதிக பரப்பில் நடைபெறுகிறது.
ஆண்டிற்கு 3 அறுவடை நடைபெறுவதால் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதியாக உள்ளது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் பன்னீர் மற்றும் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது.
கட்டுபடியான விலை கிடைப்பதில் பல ஆண்டு களாக பிரச்னை உள்ளது. ஒயின் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
15 ஆண்டுகளுக்கு முன் ஆனைமலையன்பட்டியில் அமைக்கப்பட்ட ஒயின் தொழிற்சாலையால் திராட்சை விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. அவர்கள் கொள்முதல் செய்வதும் இல்லை. கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஆண்டிற்கு ஒரு முறை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள்.
கம்பம் பகுதியில் விளையும் மஸ்கட் எனும் பன்னீர் திராட்சையை மஹாராஷ்டிரா, நாசிக் நகரில் 300 ஏக்கரில் சாகுபடி செய்து அங்கு ஒயின் தயாரிக்கிறனர். இந்திய ஏற்றுமதியில் தற்போது 40 சதவீதம் பன்னீர் திராட்சை ஒயின் விற்பனையாகிறது.
ஆல்கஹால் 7.5 சதவீதமாக அதில் உள்ளது. வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மஸ்கட்டோ (Moscato Sparkling white wine ) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதே நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையிலிருந்து ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை கம்பம் பகுதியில் அமைக்க முன்வர வேண்டும்.
ஒயின் தொழிற்சாலைக்கு கலர் தேவை இல்லை.
இனிப்பு விஷயத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். அதற்கான தொழில்நுட்பங்களை ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் வழங்கும்.
இதனால் திராட்சை விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், உற்பத்தி செய்யப்படும் பழங்கள் வீணாகாமல் பயன்படுத்தும் வகையில் ஒயின் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

