/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
/
போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
ADDED : ஆக 09, 2024 12:35 AM
தேனி: கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை பொருட்களுக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் போதைக்கு எதிராக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆக.,12ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைக்கு எதிராக உறுதி மொழி எடுப்பது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் வருவாய்த்துறையினர், நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், போலீசார் அருகில் உள்ள கல்வி நிலையங்களில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை பற்றி எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், போதைக்கு எதிராக உறுதி மொழி எடுத்து, பொதுமக்கள், மாணவர்கள் https://enforcementbureautn.org/pledge என்ற இணைய முகவரியில், பெயருடன் பதிவு செய்தால் சான்றிதழ் வழங்கப்படும்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,க்கள் முத்துமாதவன், தாட்சாயினி, டி.எஸ்.பிக்கள் ரவிசக்கரவர்த்தி(மதுவிலக்கு), பார்த்திபன் பங்கேற்றனர். கலால் உதவி ஆணையர் ரவிசந்திரன் ஒருங்கிணைத்தார்.