ADDED : மே 31, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : மதுரை கணபதி நகரை சேர்ந்த ஹாருண் ரஷீத்.
பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் திருமண மண்டபம் மற்றும் சில கட்டடங்கள் கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிக்கு பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த மாதவன், தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றனர். எ.புதுப்பட்டியைச் சேர்ந்தசுரேஷ்குமார் 51. முன் விரோதம் காரணமாக கட்டுமான பணியின் போது பணியாளர்களிடம் அரிவாளை காட்டி யாரும் வேலை செய்யக்கூடாது என மிரட்டியுள்ளார். போலீசார் சுரேஷ் குமாரிடம் விசாரிக்கின்றனர்.