/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்
/
க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்
க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்
க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்
ADDED : ஜூன் 09, 2024 04:49 AM
கம்பம் : க.புதுப்பட்டியில் 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து பெண்கள் தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
க.புதுப்பட்டிக்கு குடிநீர் லோயர் கேம்பிலிருந்து குடிநீர் வாரியம் மூலம் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாற்றில் பேரூராட்சி சார்பில் சொந்தமாக பம்பிங் செய்தும் வினியோகிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக 3 மற்றும் 4 வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.